பவர்புல் கருடன்
UPDATED : ஜன 16, 2025 | ADDED : ஜன 16, 2025
திருநெல்வேலி டவுன் அருகே 10 கி.மீ., துாரத்தில் உள்ள கிராமம் திருவேங்கடநாதபுரம். இங்கு வெங்கடாசலபதி என்ற பெயரில் பெருமாள் அருள்புரிகிறார். இங்கிருந்த கருட வாகனத்தில் பின்னம் (குறை) ஏற்பட்டது. அதனால் புதிய கருட வாகனம் ஒன்றை வெண்கலத்தில் உருவாக்கினர். அதில் பெருமாளை எழுந்தருளச் செய்த போது கருடனை நகர்த்த முடியவில்லை. பிரசன்னம் பார்த்த போது பழைய வாகனத்திலேயே கருட சேவை நடக்க வேண்டும் என உத்தரவு கிடைத்தது. மீண்டும் பழைய கருட வாகனத்தில் வலம் வரச் செய்தனர். இந்த 'பவர்புல்' கருடனை தரிசித்தால் நன்மை அதிகரிக்கும். இதனால் 'கருடன் இருக்க கவலை எதற்கு' எனச் சொல்லும் வழக்கம் வந்தது.