24 நிமிடத்திற்குள்...
UPDATED : ஜன 23, 2025 | ADDED : ஜன 23, 2025
சிவனிடம் உபதேசம் பெற கைலாயம் சென்றார் பிரம்மா. அவரிடம் சில வில்வ விதைகளைக் கொடுத்து, 'பூலோகத்தில் இதை விதையுங்கள். விதைக்கப்பட்ட 24 நிமிடத்திற்குள் (ஒரு நாழிகைக்குள்) எந்த இடத்தில் மரமாகிறதோ அங்கு உபதேசிப்பேன்' என்றார் சிவன். அதன்படி பிரம்மா ஓரிடத்தில் விதைத்த போது உடனே மரம் வளர்ந்தது. காட்சியளித்த சிவனும் உபதேசம் செய்தார். ஆதி வில்வவனநாதர் என்ற பெயரில் சிவபெருமான் குடிகொண்ட தலம் மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர்.