புண்ணியம் செய்
'புண்ணியம் செய்தவர்க்கு பூவும் நீரும் உண்டு' என்கிறார் திருமூலர். பகவானுக்கு நீரால் அபிஷேகம் செய்து பூவால் அர்ச்சனை செய்யும் வாய்ப்பு புண்ணியம் செய்தவருக்கு மட்டுமே கிடைக்கும். புண்ணியம் என்றால் என்ன... மனதால் நல்லதை நினைப்பது, வாயால் நல்லதை பேசுவது, நல்ல செயல்களைச் செய்வது. பிறருக்கு முடிந்த உதவியைச் செய்வதும் புண்ணியமே.சவுந்தர்யலஹரியின் முதல் ஸ்லோகத்தில், 'புண்ணிய பலனின் காரணமாகவே இந்த நுாலை படிக்கும் பேறு பெற்றாய். இல்லாவிட்டால் எப்படி கற்க முடியும்' என நம்மிடம் கேட்கிறார் ஆதிசங்கரர். நாராயணீயத்தின் முதல் ஸ்லோகத்தில்,'குருவாயூரப்பனின் அருள் பிரபாவத்தை புண்ணியம் செய்ததால் தான் கற்கிறாய் என்கிறார் நாராயண பட்டத்திரி. இப்படிப்பட்ட நல்ல விஷயங்களை இளைய தலைமுறையினருக்கு சொல்லித் தந்தால் அவர்களும் நல்லதைச் செய்து நலமாக வாழ்வார்கள். -லட்சுமி பாலசுப்ரமணியன்