மஞ்சப்பால்
UPDATED : ஜூலை 15, 2025 | ADDED : ஜூலை 15, 2025
மழை தெய்வமான மாரியம்மனுக்கு ஆடிச்செவ்வாய், வெள்ளியன்று கஞ்சி, கூழ் படைத்து வழிபடுவர். ஆடிக்கூழ் வார்த்தால் அம்மன் அருளால் நாடு செழிக்க மழை பொழியும். விரதமிருந்து பெண்கள் வேப்பிலை சேலை உடுத்தியபடி கோயிலை வலம் வந்தும், அங்கப்பிரதட்சணம் செய்தும் நேர்த்திக்கடன் செலுத்துவர். அம்மனுக்கும், வாகனமான சிம்மத்திற்கும் மஞ்சப்பால் அபிஷேகம் செய்வர். மஞ்சள் பொடி கலந்த தண்ணீருக்கு 'மஞ்சப்பால்' என்பது பெயர். கன்னியர்கள் மஞ்சப்பால் அபிஷேகம் செய்ய திருமணயோகம் உண்டாகும்.