ஸ்ரீவில்லிபுத்துார் தலவரலாறு
UPDATED : ஜூலை 25, 2025 | ADDED : ஜூலை 25, 2025
பூமிதேவியின் அம்சமான ஆண்டாள் ஸ்ரீவில்லிபுத்துாரில் உள்ள நந்தவனத்தில் அவதரித்தாள். அங்குள்ள ஒரு துளசிச் செடியின் அடியில் கலியுகம் பிறந்து 98வதாக நிகழ்ந்த நள வருடம் ஆடி மாதம் வளர்பிறை பூர நட்சத்திர நன்னாளில் ஆண்டாளைக் கண்டெடுத்தார் பெரியாழ்வார். தான் பூஜித்து வந்த வடபெருங்கோயிலுடையானிடம் தெரிவித்தார். 'கோதை என பெயரிட்டு குழந்தையை வளர்ப்பீராக' என அருள்புரிந்தார். ஆண்டாளுக்கு கண்ணன் மீது கொண்ட பக்தி காதலாக மாறியது. அவனையே தன் கணவனாக நினைத்து வாழத் தொடங்கினாள். அவளுடைய அன்பை ஏற்ற கண்ணனும் ஆண்டாளின் பூமாலை, பாமாலையை ஏற்று அருள்புரிந்தார். அதன் அடிப்படையில் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் உருவானது.