கல்வியில் சிறக்க...
UPDATED : செப் 29, 2025 | ADDED : செப் 29, 2025
சிவபெருமானை அலட்சியப்படுத்தும் விதமாக தட்சன் ஒரு யாகம் நடத்தினான். சிவன் தன் அம்சமான வீரபத்திரரை அனுப்பினார். அவர் யாகத்தை அழித்ததுடன் யாகத்தை முன்னின்று நடத்திய பிரம்மாவையும் தண்டித்தார். அவரது மனைவியான கலைமகளின் மூக்கையும் அரிந்தார். பயந்து நின்ற அவள் தன் கணவன் பிரம்மனுடன் சீர்காழிக்குச் சென்று சிவனை வழிபட்டாள். இந்த நிகழ்ச்சியை திருஞானசம்பந்தர், 'நாவியலும் மங்கையொடு நான்முகன் தான் வழிபட்ட நலங்கோயில்' எனப் பாடியுள்ளார். சீர்காழி கல்வித்தலமாகும். மாணவர்கள் ஒருமுறை சீர்காழி தோணியப்பர், திருஞானசம்பந்தரை தரிசித்தால் கல்வியில் சிறந்து விளங்குவர்.