உள்ளூர் செய்திகள்

அமைதியின் சொர்க்கம்

குன்றுகள் பல சூழ்ந்திருக்க நடுவிலுள்ள வைரக் கிரீடம் போல ஜொலிக்கிறது இன்றைய புட்டபர்த்தி. முன்பு பாம்பு புற்றுக்கள் நிறைந்த இடமாக இருந்ததால் 'புட்டபர்த்தி' எனப்பட்டது. 'புட்ட' என்றால் புற்று. 1947ல் பகவான் சத்ய சாய்பாபா தன் சகோதரருக்கு எழுதிய கடிதத்தில், 'புதராக சூழ்ந்திருக்கும் இந்த இடத்தில் எதிர்காலத்தில் பிரமாண்ட மண்டபங்களை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்' எனக் குறிப்பிட்டிருந்தார். அவர் சொன்னபடி புட்டபர்த்தி இன்று உலகம் போற்றும் தலமாக மாறி விட்டது. இப்போது பயிலரங்கப் பட்டறையாக திகழும் இங்கு பயிற்சி பெறுவதற்காக வெளிநாட்டவர்கள் வருகின்றனர். ஆஸ்ரமத்தில் உள்ள பிரசாந்தி நிலையத்தில் காலடி வைத்ததும் அவர்கள் இனிய அனுபவம் கிடைப்பதை உணர்கிறார்கள். பிரசாந்தி நிலையத்தை 'அமைதியின் சொர்க்கம்' என்றும் அழைக்கலாம்.