கோட்டை மாரி
UPDATED : ஜூலை 15, 2025 | ADDED : ஜூலை 15, 2025
திண்டுக்கல் நகரின் காவல் தெய்வம் கோட்டை மாரியம்மன். சிறப்பு மிக்க இந்நகரின் மேற்கில் பத்மகிரி என்னும் மலைக் கோட்டை உள்ளது. 300 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட கோட்டை மீது திப்புசுல்தானின் படைவீரர்கள் தங்கியிருந்தனர். சிப்பாய் ஒருவரின் கனவில் மாரியம்மன் காட்சியளித்து தன்னை வழிபடும்படி கட்டளையிட்டாள். அதன்படி இங்கு வழிபாடு தொடங்கியது. மலைக்கோட்டையின் பின்னணியால் அம்மனுக்கும் 'கோட்டை மாரி' எனப் பெயர் வந்தது. அம்மனின் எட்டு கைகளில் பாம்பு, சூலாயுதம், மணி, கபாலம், வில், கிண்ணம் உள்ளன. அம்மன் சிலை பூமிக்கடியில் அதிக ஆழத்தில் புதைந்துள்ளது.