முருகனுக்கு பிடித்த டான்ஸ்
மேற்குவங்கத்தில் புருலியா மாவட்டத்தில் வாழும் பூமிஜ் பழங்குடி மக்கள் கார்த்திகேயன் என்னும் பெயரில் முருகனை வழிபடுகின்றனர். முருகனை சூரியனின் அம்சமாகக் கருதும் இவர்கள் விவசாயம் செழிக்க வழிபடுகின்றனர். தாரகாசுரனிடம் இருந்து தேவர்களைக் காப்பாற்றிய வீர இளைஞர் கார்த்திகேயன் என்றும், கார்த்திகைப் பெண்கள் முருகனை வளர்த்து ஆளாக்கி பார்வதியிடம் ஒப்படைத்ததாகவும், அதனால் அவளுக்கு 'ஸ்கந்த மாதா' என்று பெயர் வந்ததாகவும் கூறுகின்றனர். சிவனின் மகன் என்பதை விட, பார்வதியின் மகன் முருகன் என்றே கருதுகின்றனர். பூமிஜ் மக்கள் பார்வதி வழிபாட்டில் மாமிசம் படைத்தாலும், கார்த்திகேயனுக்கு சைவ உணவு படையலிடுவர். கார்த்திகேயனை பிரம்மச்சாரியாக கருதும் இவர்கள், 'புருலியா சாவ்' என்னும் பெயரில் முகமூடி அணிந்தபடி ஆடும் நடனம் பிரசித்தமானது. கேரளத்தின் கதகளி போன்ற இதில் அபிநயத்துடன் நடித்தபடி கலைஞர்கள் ஆடுவர்.