கைமேல் பலன் உண்டு
புராணங்களில் பலரும் சூரிய பகவானை வழிபட்டு கைமேல் பலனைப் பெற்றுள்ளனர். * பிரம்மாவின் புத்திரரான நாரதர் இவரை வழிபட்டு வரம் பெற்றர் என ஸ்காந்த புராணம் சொல்கிறது. * பவிஷ்ய, சவுர புராணங்கள் இவரையே உலகின் அதிபதி என்று வர்ணிக்கிறது. * மகாபாரதத்தில் வரும் தர்மர் இவரை வழிபட்டு அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரத்தைப் பெற்றார். இதற்கு நன்றி செலுத்தும் விதமாக சூரியனின் 108 பெயர்களைச் சொல்லி வணங்கினார். * ராவணனை அழிக்க முடியாமல் ஒருகட்டத்தில் சோர்வடைந்தார் ஸ்ரீராமபிரான். அப்போது அங்கு வந்த அகத்திய முனிவர் அவருக்கு 'ஆதித்ய ஹ்ருதயம்' என்னும் ஸ்தோத்திரத்தை உபதேசித்தார். இதை மூன்று முறை கூறி ஆத்மபலத்தை பெற்ற ஸ்ரீராமபிரான், புதுத்தெம்புடன் போரில் பங்கேற்று ராவணனை அழித்தார். * துவாரகையைச் சேர்ந்த மன்னன் இவரை வழிபட்டு தினமும் தங்கம் வழங்கும் சியாமந்தகமணி என்னும் உயர்ந்த ஆபரணத்தை பெற்றார்.