கிளி சொன்ன சேதி
திருவாரூர் தியாகராஜர் கோயிலில் செல்வாக்காக இருந்தவர் நாகராஜ நம்பி. பேராசை கொண்ட இவர் ஒருமுறை கோயிலில் இருந்த நாயன்மார் சிலைகளில் இரண்டை தன் வீட்டிற்கு எடுத்துச் சென்றார். பணியாளர்கள் இதை மன்னர் கிருஷ்ணராயரிடம் தெரிவிக்க பயந்தனர். ஒரு கொல்லனிடம் அச்சிலைகளை கொடுத்து வைத்திருந்தார் நாகராஜ நம்பி. இதையறிந்த புலவர் ஒருவர் நாயன்மார் சிலையை மீட்க விரும்பினார். இதற்காக ஒரு பாடலை இயற்றி தான் வளர்க்கும் கிளியிடம் சொல்லிக் கொடுத்தார். பயிற்சி பெற்ற கிளியும் மன்னர் கோயிலுக்கு வந்த போது அவரிடம் பாடிக் காட்டியது. விஷயத்தை அறிந்த மன்னர் அந்த சிலைகளை மீட்டார். நாகராஜ நம்பிக்கும் தண்டனை வழங்கினார். கிளி பாடிய பாட்டுமுன்னால் அறுபத்துமூவர் இருந்தார் அவரில்இன்னாள் இரண்டு பேர் ஏகினர் - கன்னான்நருக்குகின்றான் விற்றுவிட்ட நாகராச நம்பிஇருக்கின்றான் கிருட்டிண ராயா.