உள்ளூர் செய்திகள்

சனியால் பயமில்லை

நமது வினைகளுக்கு பலன்களை கொடுக்கும் பணிகளை மேற்கொள்பவர்கள் நவக்கிரகங்கள். அவர்களில் சனீஸ்வரர் மட்டுமே எவ்வித பரிகாரங்களுக்கும் அடங்காமல் தனது பணியினை சிறப்பாக செய்பவர். அவரை பிரீத்தி செய்ய கீழ்க்கண்ட ஸ்லோகத்தை தினமும் 8 முறை சொல்லுங்கள். நன்மை செய்வார். நீலாஞ்ஜன ஸமாபாஸம்ரவிபுத்ரம் யமாக்ரஜம்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம்தம் நமாமி சனைச்சரம்.மை போல கரிய நிறம் கொண்டவனே. சூரியனின் குழந்தையே. எமனின் சகோதரனே. சாயாதேவிக்கும் சூரியனுக்கும் மைந்தனாகப் பிறந்தவனே. மந்தமாகச் செல்லும் சனீஸ்வரனே. உன்னை வணங்குகிறேன்.