உள்ளூர் செய்திகள்

வரம் தருபவர்

அந்நியர்களின் ஆட்சியின் போது ஹிந்து கோயில்கள் தாக்கப்பட்டதால் பூஜைகள் நின்று போயின. சில கோயில்கள் தரைமட்டமாயின. அவற்றில் ஒன்று தென்காசி மாவட்டம், கரிவலம் வந்த நல்லுார் அருகிலுள்ள சென்னிகுளம் சிவன்கோயில். காகநதியில் அணை கட்ட ஆங்கிலேயர்கள் இக்கோயிலின் துாண்களை பயன்படுத்தினர். இதனால் சென்னிகுளத்தில் சிவலிங்கமும், நந்தியும் மண்ணில் புதைந்து கிடந்தன. அதை சிவனடியார்கள் பிரதிஷ்டை செய்து புதியதாக கோயிலை எழுப்பினர். இங்கு வந்த சித்தர் ஒருவர் சுவாமியின் பெயர் 'வைத்தியநாதர்' என தெரிவித்துள்ளார். கார்த்திகை, பிரதோஷ நாட்களில் பூஜை நடக்கிறது. முருகப்பெருமானுக்கு பிடித்தமான காவடிசிந்து பாடிய அண்ணாமலை கவிராயரின் சொந்த ஊர் சென்னிகுளம்.