உள்ளூர் செய்திகள்

செவ்வாய் தோஷம் விலக...

கன்னியம் பிகைசேய் போற்றிகலைமதிப் புலவா போற்றிபொன்னியந் துறையாய் போற்றி பூந்துறை நாடா போற்றிஇன்னிலம் இயம்ப வானோர் இறைஞ்ச நான்மறை நின்றேத்தச் சென்னியங் கிரியில் வாழும் தேவனே போற்றி போற்றிஆவலங் கொழிந்தார் போற்றி அடிதொழும் அடிகேள் போற்றி பூவலங் கொண்டாய் போற்றி புலாதிகட் கணுாகாய் போற்றிகேவலங் கடந்தாய் போற்றி கிளரொளிப் பொருளே போற்றி சேவலங் கொடியாய் போற்றிசிரகிரி வாழ்வே போற்றிமோகற மொழிந்தாய் போற்றிமுராரி மாமருகா போற்றி யாகர மறையாய் போற்றியாறுமுக விறைவா போற்றி மாகர வயிலாய் போற்றி மரகத மயிலாய் போற்றி சேகர கிரியாய் போற்றி சிரகிரி வாழ்வே போற்றி தென் செய்தே னிமிர்கூ தாளஞ்செச்சை பூங் குரவ நீப மின்செய்பூ ணிமைக்குந் திண்டோள்மிலைந்த பொன் மாலை யோடுமின் சொலும் பொருளு மின்றி வெளிறியீர்ஞ் சுவைய திர்ந்த புன்சொலாற் றமியேன் சாற்றும்தொடையலும் புனைவாய் போற்றிகொங்கு நாடு எனப் போற்றப்படும் கோயம்புத்துாரில் உள்ள மலைக்கோயில் சென்னிமலை. புஷ்பகிரி, மகுடகிரி, சிரகிரி என்றும் இதற்கு பெயர்கள் உண்டு. இங்குள்ள முருகன் தன்னை தானே பூஜித்த பெருமை கொண்டவர். இங்குள்ள மாமாங்கத் தீர்த்தம் 12 ஆண்டுக்கு ஒரு முறை பொங்கும் சிறப்புடையது. அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்ற தலம் இது. கந்த சஷ்டிக் கவசத்தை தேவராய சுவாமிகள் அரங்கேற்றியது இங்கு தான். 1984ல் இரட்டை மாட்டுவண்டியில் பூட்டிய காளைகள் மலையேறிய அதிசயம் இங்கு நடந்தது. இத்தலத்தின் புகழ் பாடும் நுால்களில் சென்னிமலை தலபுராணம் சிறப்பானது. இதை இயற்றியவர் சரவண மாமுனிவர். செவ்வாய் தோஷம் போக்கும் சென்னிமலை முருகனை வழிபடுவோருக்கு வாழ்வில் எல்லா நலன்களும் உண்டாகும்.