உடனடி தீர்வுக்கு...
நோய், மனக்கோளாறு, திருமணத்தடை, குழந்தையின்மை, கடன் பிரச்னைகளால் சிரமப்படுபவர்கள் இந்த நரசிம்மர் மந்திரத்தை 48 முறை தினமும் சொல்லுங்கள். காய்ச்சிய பசும்பாலை நைவேத்தியம் செய்யுங்கள்.மாதா ந்ருஸிம்ஹ: பிதா ந்ருஸிம்ஹ:ப்ராதா ந்ருஸிம்ஹ: ஸகா ந்ருஸிம்ஹ:வித்யா ந்ருஸிம்ஹ: த்ரவிணம் ந்ருஸிம்ஹ:ஸ்வாமி ந்ருஸிம்ஹ: ஸகலம் ந்ருஸிம்ஹ:இதோ ந்ருஸிம்ஹ: பரதோ ந்ருஸிம்ஹ:யதோ யதோ யாஹி: ததோ ந்ருஸிம்ஹ:ந்ருஸிம்ஹ தேவாத் பரோ நகஸ்சித்:தஸ்மான் ந்ருஸிம்ஹ சரணம் ப்ரபத்யே:1. நரசிம்மனே தாய்; நரசிம்மனே தந்தை2. சகோதரனும் நரசிம்மனே; தோழனும் நரசிம்மனே3. அறிவும் நரசிம்மனே; செல்வமும் நரசிம்மனே4. எஜமானனும் நரசிம்மனே; எல்லாமும் நரசிம்மனே5. இந்த லோகம் முழுவதிலும் நரசிம்மனே; பரலோகத்திலும் நரசிம்மனே. 6. எங்கெங்கு நீ செல்கிறாயோ அங்கெல்லாம் நரசிம்மனே7. நரசிம்மனைக் காட்டிலும் உயர்ந்தவர் ஒருவரும் இல்லை. 8. அதனால் நரசிம்மனே; உம்மைச் சரணடைகிறேன்.