உள்ளூர் செய்திகள்

தேசப்பற்று ஸ்லோகம்

ராமனுக்கு அடியவர் என்பதால் அனுமனுக்கு 'ராமதாசர்' என்று பெயர். அவர் மீது துளசிதாசர் பாடியது அனுமன் சாலீஸா. இது நாற்பது பாடலை கொண்டது. இதைப் பாடினால் கோழையும் தைரியசாலியாக மாறி விடுவான் என்பர். ஹிந்தியில் உள்ள இப்பாடலை அனுமன் பக்தர்கள் பக்தியுடன் பாடுகின்றனர். அந்நியப் படையெடுப்பின் போது பக்தி, தேசப்பற்றை மக்கள் மத்தியில் நிலைநிறுத்திய பெருமை இதற்குண்டு. மூலநட்சத்திரத்தில் பிறந்த துளசிதாசரை அனுமனின் அம்சம் என்பர்.