உடலும் மனமும்
UPDATED : மே 24, 2024 | ADDED : மே 24, 2024
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். என்னதான் ஒருவர் பணக்காரராக இருந்தாலும் உடல்நலம் இல்லாவிட்டால் செல்வத்தால் பயனில்லை. இதையே 'சுவரை வைத்துத் தானே சித்திரம்' என்பார்கள். எனவே பணம், புகழ், பதவியை விட மனம், உடல் நலம் மிகவும் முக்கியம். இதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா... 1. தினமும் உதயத்தின் போது சூரியபகவானை கைகூப்பி வணங்குங்கள். இதனால் உடல்நலத்துடன் வாழலாம். ஞாயிறன்று காலையில் கோயிலுக்குச் சென்று செந்தாமரை மலரால் சூரியபகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள். 2. மனநலத்திற்கு சந்திர பகவானை வணங்குங்கள். சந்திர தரிசனம் செய்தால் மனதில் அமைதி நிலவும். அமாவாசையில் இருந்து வரும் மூன்றாம் நாளன்று சந்திர தரிசனம் செய்தால் மனநலம், பணப்புழக்கம் நன்றாக இருக்கும். இதனால் உங்களின் தாயாருக்கு நன்மை கிடைக்கும்.