எங்கும் வெற்றி
UPDATED : மே 31, 2024 | ADDED : மே 31, 2024
சுக்லாம் பரதரம் விஷ்ணும்சசி வர்ணம் சதுர்ப்புஜம்ப்ரஸன்ன வதனம் த்யாயேத்ஸர்வ விக்னோப ஸாந்தயே!வெண்மையான ஆடை தரித்தவரும், எங்கும் நிறைந்தவரும், சந்திரன் போல வெள்ளை நிறம் கொண்டவரும், நான்கு கைகள் உடையவரும், நன்மையைத் தரும் யானை முகத்தவருமான விநாயகப் பெருமானே... செயல்களில் உண்டாகும் தடைகள் விலக உன்னைத் தியானிக்கிறேன். இந்த ஸ்லோகத்தை தினமும் சொன்னால் வெற்றி கிடைக்கும் என்கிறார் காஞ்சி மஹாபெரியவர்.