தங்கம் வாங்க...
UPDATED : ஜூன் 14, 2024 | ADDED : ஜூன் 14, 2024
சிதம்பரம் கோயிலில் தில்லை வாழ் அந்தணரான தீட்சிதர்களுக்கு சம்பளம் தரும் வழக்கம் இல்லை. இரவில் நடை சாத்தும் போது இங்கு சுவர்ண கால பைரவர் சன்னதியில் ஒரு செப்புத் தகட்டை வைத்து விட்டு புறப்படுவர். மறுநாள் காலையில் பைரவர் அருளால் அது தங்கத்தகடாக மாறி விடும். அதையே சம்பளமாக கொள்வர். இந்த பைரவரை ஞாயிறு ராகு காலத்தில் (மாலை 4:30- 6:00 மணி) வழிபட்டால் தங்கம் வாங்கும் யோகம் உண்டாகும்.