அபாயம் நீங்கிட...
UPDATED : ஜூன் 21, 2024 | ADDED : ஜூன் 21, 2024
'பசி வந்தால் பத்தும் பறந்துபோகும். அதுபோல 'நமசிவாய' என்றாலும் பத்தும் பறந்து விடும் எனத் திருப்புகழில் சொல்கிறார் அருணகிரிநாதர். 'ஆவியீர் ஐந்தை அபரத்தே வைத்தோதில் ஆவி ஈரைந்தை அகற்றலாம்' என்கிறார். அவர் சொல்வது:மக்களே. ஐந்தெழுத்து மந்திரமான'சிவாயநம' என்பதை சொன்னால் 'ஆவி பத்தும்' பறந்து விடும். அதென்ன 'ஆவி பத்து'என்கிறீர்களா... 'ஆ' என்ற எழுத்துடன் பத்தைச் சேர்த்தால் 'ஆபத்து'. 'வி'யுடன் சேர்த்தால் 'விபத்து'. ஐந்தெழுத்து மந்திரம் சொன்னால் இரண்டையும் தடுக்கலாம். இதை, 'சிவாயநம எனச்சிந்தித்திருப்போருக்கு அபாயம் ஒருநாளும் இல்லை' என்றார் அவ்வையார்.