உள்ளூர் செய்திகள்

அதிகாலையில் எழுந்தால் அழகான கணவர் வருவார்

திருமால் தனக்கு கணவராக அமைய வேண்டி, மார்கழி மாதத்தில் ஆண்டாள் மேற்கொண்ட விரதம் பாவை நோன்பு. இதற்காக அவள் அதிகாலையில் தோழியருடன் நீராடச் சென்றாள். தான் பிறந்த ஸ்ரீவில்லிபுத்தூரை ஆயர்பாடியாகவும், தன்னை கோபிகையாகவும் பாவனை செய்து, கண்ணனின் வீடான வடபத்ரசாயி கோவிலுக்குச் சென்று அவனை வணங்கி வந்தாள். நெய், பால் முதலிய உணவு வகைகளைத் தவிர்த்தாள். இந்த விரதத்தை கன்னிப்பெண்கள் அனுஷ்டிக்கலாம். காலை 4:30 மணிக்கு நீராடி, தினமும் ஒரு பாடல் வீதம் திருப்பாவையை மூன்று முறை படிக்க வேண்டும். உதாரணமாக மார்கழி முதல்நாள், 'மார்கழி திங்கள் மதி நிறைந்த' என்ற பாடலை மூன்று முறை படிக்க வேண்டும். இப்படியே தினமும் ஒரு பாடல் வீதம் படிக்க வேண்டும்.மார்கழியில் 29 நாட்களே இருப்பதால், கடைசி நாளில் கடைசி இரண்டு பாடல்களை மூன்று முறை பாட வேண்டும். இத்துடன் தினமும் 'வாரணமாயிரம்' பகுதியில் இருந்து 'வாரணமாயிரம் சூழ வலம் வந்து', மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத' உள்ளிட்ட பாடல்களைப் பாட வேண்டும். விரத நாட்களில் எளிய வகை உணவுகளைச் சாப்பிடலாம். ஆண்டாள், பெருமாள் படம் வைத்து உதிரிப்பூ தூவி வழிபட வேண்டும்.இவ்வாறு செய்வதால் ஆண்டாள் மனம் மகிழ்ந்து, சிறந்த, அழகான கணவன் அமைய அருள் செய்வாள்.