திருந்துங்க பெரியவர்களே!
UPDATED : ஜூலை 22, 2011 | ADDED : ஜூலை 22, 2011
தாயிற் சிறந்த கோயிலும் இல்லை; தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பர். அதேநேரம், பெற்ற தந்தையே இறைவனுக்கு எதிராக நடக்கச் சொன்னதால், அவரது கட்டளையை மீற வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானான் பிரகலாதன். ஆனாலும், 'பக்தபிரகலாதன்' என்று அவனைப் போற்றுகிறோம். அண்ணன் ராவணன் தவறான வழியில் சென்றதால், அவனுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டிய தம்பி விபீஷணன் ராமனோடு சேர்ந்து கொண்டான். அண்ணன் ராமனுக்காக பரதன், தன் தாய் கைகேயியை புறக்கணித்து விலகினான். பொதுவான நீதி, தர்மம் இவர்களுக்கு பொருந்தாமல் போக சூழ்நிலையே காரணமாயிற்று. கடவுளுக்கும் தர்மத்திற்கும் விரோதமாக நடக்கும் பெரியவர்களைத் திருத்த வேண்டும் என்பதையே இவர்களின் வரலாறு எடுத்துக்காட்டுகிறது.