கோமியம் தெரியுங்கள்!
UPDATED : நவ 13, 2013 | ADDED : நவ 13, 2013
ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் உறவினர்கள் வீட்டில் மரணம் ஏதேனும் நேர்ந்தால் அங்கு செல்லக்கூடாது. அத்தியாவசியமாக செல்ல வேண்டும் என்றால், மாலையை கழற்றிவிட்டு செல்லவேண்டும். அந்த ஆண்டு மலைக்கு செல்லக்கூடாது. பணி காரணமாக வெளியில் செல்லும் பக்தர்கள் சாலையில் மரண ஊர்வலத்தைக் காண நேர்ந்தால் வீட்டிற்கு வந்து கோமியம் தெளித்து நீராடிவிட்டு, அதன்பிறகே பூஜை செய்ய வேண்டும்.