அள்ளித்தரும் வள்ளல்
UPDATED : டிச 23, 2016 | ADDED : டிச 23, 2016
நல்லபுத்தி, உடல்பலம், மன தைரியம், புகழ் ஆகியவை மனிதனுக்கு தேவையானவை. ஆனால் எல்லாரிடமும் இவை எல்லாமும் இருப்பதில்லை. ஒன்று இருந்தால் ஒன்று இருக்காது. ஆனால் இவற்றை ஒட்டுமொத்தமாகப் பெற அனுமனை வழிபட வேண்டும் என்று ஒரு ஸ்லோகம் கூறுகிறது.'புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா!அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹநுமத் ஸ்மரணாபவேத்!!'இதன் பொருளைத் தெரிந்து கொள்ளுங்கள்.''புத்தி, உடல்வலிமை, புகழ், மன உறுதி, அஞ்சாநெஞ்சம், விழிப்புணர்வு, வாக்குவன்மை ஆகிய அனைத்தும் அனுமனை மனதார வணங்கினால் நம்மை வந்தடையும்.''