உள்ளூர் செய்திகள்

சிறப்பான சிவமூர்த்தங்கள்

சிவபெருமான் கோயில்களில் உருவம், அருவுருவம், அருவம் என்னும் வகைநிலைகளில் காட்சிதருகிறார். கருவறையில் பெரும்பாலும் அருவுருவத் திருமேனியான சிவலிங்கமாக வீற்றிருப்பார். அருவத்திருமேனியாக (உருவமே இல்லாத நிலை) சிதம்பரம், திருப்பெருந்துறை போன்ற கோயில்களில் அருள்புரிகிறார். உருவத்திருமேனியை சிவமூர்த்தங்கள் என்று குறிப்பிடுவர். இதில் ஐந்து சிறப்புடையவை.தட்சிணாமூர்த்தி - மன அமைதி, ஞானம்பிட்சாடனர் - வசீகரம், புத்துணர்வுபைரவர் - தைரியம், எதிரிபயம் தீரும்நடராஜர் - ஆனந்தம், உற்சாகம்சோமாஸ்கந்த மூர்த்தி - நிம்மதி, மனநிறைவு