உள்ளூர் செய்திகள்

மகா சிவராத்திரி விரதம்

மகாசிவராத்திரி விரதம் பிப்.24ல் (மாசி12) அனுஷ்டிக்கப்படுகிறது. மாசியில் வரும் தேய்பிறை சதுர்த்தசி திதி அன்று சிவராத்திரி வரும். இந்நாளில் பகல் முழுவதும் சாப்பிடாமல், இரவில் கண்விழித்து, சிவாலயங்களில் நடக்கும் நான்கு ஜாம கால அபிஷேகத்தையும் தரிசிக்க வேண்டும். கிராமங்களில் இந்நாளில் விடிய விடிய குலதெய்வ வழிபாடு நடத்துவார்கள். இதற்காக ஏழுநாட்கள் முன்னதாக பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் துவங்குவர். இந்த ஆண்டில் பிரதோஷமும் சேர்ந்து, புனிதமான வெள்ளிக்கிழமையில் வருவதால் சிவராத்திரி விழா கோவில்களில் களை கட்டும்