அழகான குழந்தை பிறக்க...
UPDATED : ஜூன் 07, 2021 | ADDED : ஜூன் 07, 2021
வைகாசி விசாகத்தன்று விரதமிருப்பவர்கள் காலையில் எழுந்து 6:00 மணிக்குள் நீராட வேண்டும். மதியம் ஒருவேளை மட்டும் உணவு உண்ணலாம். பூஜை அறையில் விளக்கேற்றி முருகனுக்குரிய 'ஓம் சரவணபவ', 'ஓம் முருகா' ஆகிய மந்திரங்களை 108 முறை ஜபிக்க வேண்டும். திருப்புகழ், கந்தசஷ்டிக்கவசம், ஸ்கந்தகுரு கவசம், சண்முக கவசம் பாடல்களை பாராயணம் செய்யுங்கள். மாலையில் முருகன் கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி வழிபட்டு விரதத்தை முடித்துக்கொள்ளலாம். அன்றைய நாளில் கிரிவலம் சென்றால் புண்ணியம் கிடைக்கும். இவ்விரதத்தை மேற்கொள்வோருக்கு புத்திரதோஷம் நீங்கும். அறிவும், அழகும் உள்ள குழந்தைகள் பிறக்கும்.