உள்ளூர் செய்திகள்

யாகத்தீயில் தோன்றியவர்

ஒருமுறை பிரம்மா யாகம் நடத்தினார். அதற்காக தில்லைவாழ் அந்தணர் மூவாயிரம் பேரையும் சத்தியலோகத்திற்கு அழைத்தார். சிதம்பரத்தில் இருந்து நடராஜரைக் காண்பதில் கிடைக்கும் இன்பத்தை விட அந்த யாகத்தில் எங்களுக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது என அவர்கள் பிரம்மாவிடம் கேட்டனர். அப்போது அந்தணர்களிடம், ''நீங்கள் சத்தியலோகத்தில் நடக்கும் யாகத்திற்கு செல்லுங்கள். யாகத்தின் முடிவில் அங்கேயே தோன்றுவேன்'' என நடராஜர் வாக்களித்தார். அதன்படியே தோன்றினார். அவருக்கு 'ரத்னசபாபதி' என்று பெயர். இவரது சிலை மூலவர் நடராஜருக்கு அருகில் உள்ளது. தினமும் காலை 11 மணிக்கு பூஜை நடக்கும்.