உள்ளூர் செய்திகள்

எத்தனை பெயர்கள்?

அனுமனுக்கு இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு பெயர் வழங்கப்படுகின்றது. தமிழகத்தில் 'அனுமன், அனுமார்' என்று வழங்குகிறோம். கன்னட மக்கள் 'ஐயா' என்பதை இணைத்து 'ஹனுமந்தையா' என்கின்றனர் தெலுங்கில் 'அஞ்சனை மைந்தன்' என்னும் பொருளில் 'ஆஞ்சநேயலு' என்கின்றனர். மகாராஷ்டிராவில் வாயுதேவனின் மகன் என்பதால் 'மாருதி' என அழைக்கின்றனர். 'மாருதம்' என்பதற்கு 'காற்று' என பொருள். வட மாநிலங்களில் இவர் 'மகாவீரர்' எனப்படுகிறார்.