ராகு, கேது பெயர்ச்சி பலன் கணித்த விதம்
நிழல் கிரகங்களான ராகு, கேதுவுக்கு உருவம் கிடையாது. சூரியன், சந்திரனின் சுற்றுப் பாதையில் இவர்கள் சந்திக்கும் இரு புள்ளிகள் ராகு, கேது எனப்படுகிறது. வலமிருந்து இடமாகச் சுற்றும் இவர்கள், ஒரு ராசியில் ஒன்றரை ஆண்டு தங்கியிருப்பர். தற்போது ரிஷப ராசியில் இருக்கும் ராகு மேஷத்திற்கும், விருச்சிக ராசியில் இருக்கும் கேது துலாமிற்கும் 2022 மார்ச் 21ல் மதியம் 3:13 மணிக்கு பெயர்ச்சியாகின்றனர். 2023 அக்.8 வரை இங்கு தங்கியிருப்பர். அடுத்த ராகு, கேது பெயர்ச்சிக்குள் குருபகவான் இருமுறையும், சனிபகவான் ஒருமுறையும் பெயர்ச்சியாகின்றனர். இந்த மாற்றங்களை கருத்தில் கொண்டு பலன், பரிகாரங்களை அளித்துள்ளோம். இங்கு கொடுக்கப்பட்டு இருப்பது பொதுப்பலன் மட்டுமே. இதில் சுமாரான பலன் இடம் பெற்று இருந்தாலும் ஜாதகத்தில் நல்ல தசா, புத்தி நடப்பில் இருந்தால் பாதிப்புகள் குறையும்.