உள்ளூர் செய்திகள்

சத்யமேவ ஜயதே சரியான சொல் தானா?

அசோக சக்கரத்தின் கீழ் 'சத்யமேவ ஜயதே' என எழுதப்பட்டுள்ளது. 'வாய்மையே வெல்லும்' என்பது இதன் பொருள். இது சரியான சொற்றொடரா என்றால்... இல்லை. 'சத்யமேவ ஜயதி' என்பதுதான் சரியான சொல். ஆனாலும், ரிஷிகளுக்கு அக்காலத்தில் சில வார்த்தைகளை இனிமை கருதி மாற்றுவதற்காக அனுமதிக்கப்பட்டது. இந்த முறைக்கு 'ஆர்ஷப் பிரயோகம்' என்று பெயர். இந்த பிரயோகத்தை ரிஷிகள் மட்டுமே பயன்படுத்த முடியும். சாதாரண மனிதர்கள் பயன்படுத்தக் கூடாது. 'சத்யமேவ ஜயதே' என்பது ரிஷிகளின் வேத வாக்கு. எனவே அதை அப்படியே உச்சரிக்கிறோம்.