வீடுகளில் கார்த்திகை தீபம்
UPDATED : நவ 04, 2016 | ADDED : நவ 04, 2016
வீடுகளில் மாக்கோலம் இட்டு அதன் மீது அகல்விளக்குகளை ஏற்றிவைக்க வேண்டும். சிறுசிறு பந்தங்களைத் தயார் செய்து அவற்றைத் தேங்காய் எண்ணெய் அல்லது இலுப்பை எண்ணெய் விட்டு, வீட்டு வாசலிலும், வயல், தோட்டங்களிலும் நாட்டி வைத்து எரிய விட வேண்டும். வீட்டு வாசலில் வாழைத்தண்டு நாட்டி, அதன் மேல் பாதி தேங்காயை கவிழாமல் வைத்து அதனுள் திரி இட்டு எண்ணெய் விட்டு நீண்டநேரம் எரியச் செய்யச் செய்யலாம். நமிநந்தியடிகள், கலியநாயனார், கணம்புல்லநாயனார் ஆகியோர் திருவிளக்குத் தொண்டினால் முக்தி பெற்றவர்கள்.