உள்ளூர் செய்திகள்

மரங்களின் அரசன்

மரங்களின் அரசனாக விளங்கும் அரசமரம் மும்மூர்த்திகளின் அம்சமாக திகழ்கிறது. அதன் வேர் பகுதியில் பிரம்மாவும், நடுப்பகுதியில் திருமாலும், உச்சியில் சிவபெருமானும் உள்ளனர். திங்கட்கிழமை, அமாவாசை நாட்களில் அரச மரத்தை சுற்றி வந்தால் குழந்தை பேறு உண்டாகும். ஆன்மிகம் கூறும் இந்த புதிருக்கு ஆராய்ச்சி மூலம் விடை கண்டனர் அறிவியலாளர்கள். அரசமரம் அதிகப்படியான பிராண வாயுவை வெளியிடுகிறது. இதனை சுவாசிக்கும் பெண்களுக்கு கருப்பை தொடர்பான பிரச்னை நீங்கும். நாளமிலாச் சுரப்பிகள் செயல்பாடு துாண்டப்படுகிறது. குழந்தைப்பேறு இன்றி தவிக்கும் பெண்கள் அரசமரத்தின் தொடர்பால் கருவுற வாய்ப்பிருப்பதை கண்டறிந்தனர்.