"கோமதி பெயர்க்காரணம்
UPDATED : ஜூலை 30, 2012 | ADDED : ஜூலை 30, 2012
சந்திரன் (மதி) போல பொலிவான முகம் கொண்ட அம்பிகை, இங்கு தவம் புரிய வந்தபோது, தேவலோக மாதர்கள் பசுக்கள் வடிவில் அவளுடன் வந்தனர். எனவே இவள், 'கோமதி' என்று பெயர் பெற்றாள். ஆவுடையாம்பிகை என்றும் இவளுக்கு பெயர் உண்டு. 'ஆ' என்றாலும் 'பசு' தான். 'பசுக்களாகிய <உயிர்களை ஆள்பவள்' என்ற பொருளில் இவ்வாறு சொல்வர். திங்கள்கிழமைகளில் இவளுக்கு மலர் பாவாடை, வெள்ளிக் கிழமையில் தங்கப்பாவாடை அணிவித்து அலங்காரம் செய்கின்றனர். இங்கு அம்பாள் சந்நிதி முன்மண்டபத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதை, 'ஆக்ஞா சக்கரம்' என்கின்றனர். மனநோய், மனக்குழப்பம் உள்ளவர்கள் இந்த சக்கரத்தின் மேல் அமர்ந்தால், நோய் நிவர்த்தியாவதாக நம்பிக்கை.