கரும்புடன் கணபதி
UPDATED : மார் 24, 2022 | ADDED : மார் 24, 2022
திருப்பரங்குன்றத்தில் தாமரை மலரில் அமர்ந்த நிலையில் கற்பக விநாயகர் தனி சன்னதியில் இருக்கிறார். கையில் அங்குசத்திற்குப் பதிலாக கரும்பு ஏந்தியிருப்பது மாறுபட்ட அமைப்பு. தம்பியின் திருமணத்தலம் என்பதால் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக கணபதி கரும்புடன் இருக்கிறார்.