உள்ளூர் செய்திகள்

முருகனுக்கு மாவிளக்கு

பொதுவாக அம்மன் கோவில்களில் தான் மாவிளக்கு வழிபாடு விசேஷம். கார்த்திகை மாதத்தில் தினமும் முருகன் கோவில்களில் மாவிளக்கு ஏற்றி வழிபடலாம். குடும்பம், தொழில், பணி சார்ந்த ஏதாவது ஒரு கோரிக்கையை முன்வைத்து, ஏதாவது ஒரு நாளில் மாவிளக்கு ஏற்ற வேண்டும். முருகனுக்கு பிடித்தது தினைமாவு. தினைமாவில் விளக்கேற்றுவது சிறந்தது. தினை மாவுடன் தேனையும், நன்கு கனிந்த வாழைப்பழத்தையும், சர்க்கரையையும் சேர்த்துப் பிசைந்து ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு என ஒற்றைப்படை இலக்கத்தில் அகல் விளக்கு வடிவத்தில் செய்து, பஞ்சுத்திரி போட்டு, நெய்விட்டு தீபம் ஏற்ற வேண்டும். நெய்க்கு வசதி இல்லாதவர்கள் நல்லெண்ணெய் விட்டு தீபம் ஏற்றலாம்.