உள்ளூர் செய்திகள்

சுப்ரபாதம் கேட்டு மகிழ்பவர்

திருப்பதி மூலவர் போலவே வெள்ளியால் ஆன இன்னொரு பெருமாள் சிலை 6ம் நுாற்றாண்டில் உருவாக்கப்பட்டது. இதைச் செய்தவர் சமவை என்னும் பல்லவ அரசி. மேல் திருப்பதி கோயில் வளாகத்தின் 8வது கல்வெட்டில் அரசி பற்றிய குறிப்பு இடம் பெற்றுள்ளது. அக்காலத்தில் இந்த பெருமாள் 'மனவளப் பெருமாள்' என அழைக்கப்பட்டார். தற்போது 'போக சீனிவாசர்' எனப்படுகிறார். 'இன்பம் அனுபவிப்பவர்' என்பது பொருள். சயன மண்டபத்தில் பட்டு மெத்தையோடு இருக்கும் இவரே வெள்ளி ஊஞ்சலில் துாங்கி, தினமும் அதிகாலையில் சுப்ரபாதம் கேட்டு கண் விழிக்கிறார்.