உள்ளூர் செய்திகள்

தினமும் சந்தன அபிஷேகம்

'ஓம் இரண்யாய நம' என்று தன்னுடைய பெயரைச் சொல்ல மறுத்த மகன் பிரகலாதனை அசுரனான இரண்யன் கல்லுடன் கட்டி கடலில் வீசினான். அவன் வெளியில் வர முடியாதபடி பெரிய மலையையும் வைத்து அழுத்தினான். பக்தனைக் காப்பாற்ற மகாவிஷ்ணு அம்மலையைப் பிளந்தார். அந்த இடமே விசாகப்பட்டினத்திற்கு அருகிலுள்ள சிம்மாசலம். மலையை குடைந்து தேர் ஒன்றைக் குதிரைகள் இழுப்பது போல இங்கு கோயிலை வடிவமைத்துள்ளனர். மூலவர் நரசிம்மர் கோபத்துடன் இருப்பதால் தினமும் சந்தன சாத்துபடி நடக்கிறது. துன்பம் நீங்கவும், நிம்மதி நிலைக்கவும் பக்தர்கள் சந்தன அபிஷேகம் செய்கின்றனர்.