உள்ளூர் செய்திகள்

தன்னைத் தானே பூஜித்த சிவன்

விநாயகர், முருகன், பிரம்மா, அம்பிகை, விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் சிவனை பூஜித்து பலன் பெற்றுள்ளனர். ஆனால், சிவன் தன்னைத் தானே பூஜித்த தலம் மதுரை. இங்கு இம்மையில் நன்மை தருவார் என்னும் பெயரில் கோவில் கொண்டிருக்கிறார். இங்குள்ள கருவறையில் சிவனும், பார்வதியும் வீற்றிருக்க, அவர்களின் முன்னிலையில் சிவலிங்கம் உள்ளது. மதுரையின் மன்னராக ஆட்சிப் பொறுப்பை ஏற்க வந்த சிவன், இத்தலத்தில் சிவபூஜை செய்ததாக ஐதீகம். ஆவணிமூலத் திருவிழா அன்று, சொக்கநாதரும், மீனாட்சியும் இக்கோவிலுக்கு எழுந்தருள்வர். அவர்கள் முன்னிலையில் இம்மையில் நன்மை தருவாருக்கு பூஜை நடக்கும். அன்றிரவு சொக்க நாதருக்கு பட்டாபிஷேகம் செய்யப்படும்.