சேலை கட்டும் சிவன்
UPDATED : நவ 27, 2020 | ADDED : நவ 27, 2020
மயிலாடுதுறையில் மாயூரநாதசுவாமி என்னும் பெயரில் சிவன் கோயில் உள்ளது. இங்கு 'அனவித்யாம்பிகை' என்னும் பெண்ணின் பெயரில் சிவலிங்கம் ஒன்று உள்ளது. இதன் பின்னணி தெரியுமா? சிவபக்தர்களான நாத சன்மாவும், அவரது மனைவி அனவித்தியும் வழிபட வந்த போது, அவளது உயிர் பிரிந்து லிங்கத்திற்குள் ஐக்கியமானது. இதனால் அவளது பெயரே சிவலிங்கத்திற்கு சூட்டி, சேலை அணிவித்து வழிபடுவது வழக்கத்தில் உள்ளது.