விரதம் இருப்பதன் நோக்கம்
UPDATED : ஜன 27, 2017 | ADDED : ஜன 27, 2017
எல்லா மனிதர்களாலும் எப்போதும் பட்டினி கிடந்து விரதம் இருக்க முடியாது. எனவே சில குறிப்பிட்ட நாட்களை, விரத நாட்களாக முன்னோர் அறிவித்தனர். தெய்வத்துக்கு பிரியமானது விரதம். அதை அனுஷ்டித்தால், இயல்பாகவே நல்லதைச் செய்யும் மனப்பான்மை கிடைத்து விடும். பசியின் கொடுமையை உணர்ந்து பசித்தவருக்கு உணவளிக்கும் பக்குவம் ஏற்படும். இத்தகைய நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்ளவே விரதங்கள் பயன்படுகின்றன. விரதம் முடிந்ததும் விருந்து சாப்பிடுகிறோம். மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது விருந்து, மனிதனை எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க பழக்குவதே பண்டிகை கால விருந்துகள்.