உள்ளூர் செய்திகள்

மூங்கில் ரகசியம்

சிவன் கோவில்களில் வில்வம், வன்னி, கொன்றை போன்ற மரங்கள் தலவிருட்சமாக இருக்கும். திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில், திருவள்ளூர் அருகிலுள்ள திருப்பாசூர் வாசீஸ்வரர் கோவில், நவக்கிரக கேது தலமான நாகப்பட்டினம் மாவட்டம் கீழப்பெரும்பள்ளம் நாகநாதர் கோவில்களில் மூங்கில் தலவிருட்சமாக இருக்கிறது. சுவாமியை வழிபடுவதற்காக, வேதங்கள் மூங்கில் வடிவில் இருப்பதாக சொல்வதுண்டு. அம்பிகை தலங்களில் தேனி மாவட்டம் மூங்கிலணை காமாட்சியம்மன் கோவிலில் மூங்கிலே தலவிருட்சமாக உள்ளது.