ஒரே கருவறையில் மூன்று தேவிகள்
UPDATED : செப் 29, 2017 | ADDED : செப் 29, 2017
கோவை - பொள்ளாச்சி சாலையில் ஈச்சனாரி மகாலட்சுமி மந்திரில் சரஸ்வதி, துர்கா, மகாலட்சுமி என தேவியர் மூவரும் ஒரே சேர வீற்றிருக்கின்றனர். இங்கு நவராத்திரி விழாவில் பெரிய அளவில் கொலு வைக்கப்படும். விஜயதசமியன்று குழந்தைகள் பெற்றோருடன் இங்கு கூடுகின்றனர். அவர்களுக்கு சரஸ்வதி தேவி முன்பு ''அட்சர அப்யாசம்' எழுத்துப்பயிற்சியை தொடங்கி வைக்கின்றனர். அன்னையின் முன்பு உள்ள பளிங்கு மண்டபத்தில் நூற்றுக்கணக்கில் குழந்தைகள் அமர்ந்து எழுதுவர். இதன் மூலம் பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்குவர் என்பது ஐதீகம்.