பாடினால் டும் டும்!
UPDATED : செப் 23, 2016 | ADDED : செப் 23, 2016
பெருமாளை கணவனாக அடைய வேண்டிய ஆண்டாள் திருப்பாவை பாடினாள். அவரை திருமணம் செய்வதாக கனவு கண்டபோது, 'வாரணமாயிரம்' எனத்துவங்கும் நாச்சியார் திருமொழி பாசுரம் பாடினாள். திருமண பருவத்தில் உள்ள கன்னிப்பெண்கள், புரட்டாசி சனியன்று, இதிலுள்ள இரண்டு பாடல்களைப் பாடி பெருமாள், ஆண்டாளை வணங்கினால் நல்ல மாப்பிள்ளையும், அறிவில் சிறந்த நல்ல குழந்தைகளும் அமைவர். வாரணமாயிரம் சூழ வலஞ்செய்துநாரணன் நம்பி நடக்கின்றானென்று எதிர்பூரண பொற்குடம் வைத்துப் புரமெங்கும்தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ ! நான்.மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூதமுத்துடைத்தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்மைத்துனன் நம்பி மதுசூதன் வந்தென்னைக்கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீ ! நான்.