புற்றுமண் பிரசாதம்
UPDATED : ஜன 26, 2022 | ADDED : ஜன 26, 2022
வனப்பகுதியில் மேய்ந்த பசு ஒன்று வேங்கை மரத்தடியில் தானாக பால் சுரந்தபடி நின்றிருந்தது. இதை அறிந்த பால்காரர் அந்த இடத்திலுள்ள புற்றின் அடியில் சுயம்பு திருமேனி இருப்பதைக் கண்டார். விஷயமறிந்த ஊரார் கூடிய போது அங்கிருந்த ஒருவர் ஆவேசமுடன், “ இங்கு பண்ணாரி மாரியம்மனாக வீற்றிருந்து வரம் அளிப்பேன்” என்று அம்பிகை வாக்களித்தாள். அதன்படி கோயில் அமைத்து வழிபாடு செய்தனர். தெற்கு நோக்கி இருக்கும் இந்த அம்மனின் பிரசாதமாக புற்று மண்ணே தரப்படுகிறது. செவ்வாய், வெள்ளி, அமாவாசை நாட்களில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. சத்தியமங்கலத்தில் இருந்து 15 கி.மீ., தொலைவில் இத்தலம் உள்ளது.