உள்ளூர் செய்திகள்

வேடனின் தவ வாழ்க்கை

வில்லாளன் என்னும் வேடன் வேட்டையாடச் சென்றான். அப்போது புற்றுக்குள் இருந்த முனிவர் ஒருவர் 'ஓம் நமோ நாராயணாய' என்னும் மந்திரத்தை ஜபிக்கக் கேட்டான். அவரிடம் 'நாராயணன்' என்றால் யார் என்பதைக் கேட்டறிந்தான். அந்த மந்திரத்தைச் சொன்னால் மிருகங்களைக் கொன்று புசிக்கும் அவலநிலை உண்டாகாது என்பதையும் அறிந்தான். உடனே வேடன் தன் தாய் வில்லியிடம் தவவாழ்க்கை மேற்கொள்ள இருப்பதாகத் தெரிவித்தான். '' வேடரான நமக்கு தவம் கைகூடாது'' என அவள் தடுத்தாள். என்னால் முடியும் என வெற்றியும் பெற்றான். வேடனுக்கு காட்சியளித்த திருமால் மலையளவுக்கு தங்கம் அளித்தார். அதை தனக்காக பயன்படுத்தாமல் தன் தாய் வில்லியின் பெயரால் 'ஸ்ரீவில்லிபுத்துார்' என்னும் நகரத்தை உருவாக்கினான். 'வடபத்ரசாயி' என்னும் பெயரில் இங்கு திருமால் கோயில் கொண்டிருக்கிறார். மனதையே கடவுள் பார்க்கிறார் என்பதற்கு இந்த சம்பவம் உதாரணம்.