எண்ணியது ஈடேற ஏழு மாதம் காத்திருங்க!
UPDATED : ஜன 13, 2017 | ADDED : ஜன 13, 2017
வளர்பிறை சப்தமி திதியில் விரதமிருந்து தானம் செய்தால் சூரியன் அருளால் விருப்பங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம். உத்ராயண புண்ணிய காலமான தை வளர்பிறை சப்தமி முதல் ஆடி வளர்பிறை சப்தமி வரை ஏழுமாதம் விரதம் மேற்கொள்ள வேண்டும். இந்நாளில் ஏழைகளுக்கு குடை, செருப்பு, ஆடை, பழங்கள் என தானம் அளிப்பது அவசியம். கிருஷ்ணரின் மகனான சாம்பன், இந்த விரதம் மேற்கொண்டதாக சூரியபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.