முருகனின் 12 கைகளையும் பார்க்க வேண்டுமா?
UPDATED : அக் 27, 2016 | ADDED : அக் 27, 2016
திருச்செந்தூரில் நடக்கும் திருவிழாக்களில் கந்தசஷ்டியே மிக சிறப்பானது. சஷ்டியின் ஆறுநாள் மட்டுமே உற்சவர் முருகனின், பன்னிரண்டு கைகளையும் தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் அபய, வரத ஹஸ்தம் என்னும் முன்னிரு கைகளை மட்டுமே தரிசிக்கலாம். அலங்காரத்தின் போது மற்ற கைகளை துணியால் மூடியிருப்பர்.