காயத்ரி மந்திர பொருள் என்ன?
UPDATED : ஆக 11, 2016 | ADDED : ஆக 11, 2016
வேதத்திலிருந்து வந்த அனைவருக்கும் பொதுவான மந்திரம் தான் காயத்ரி மந்திரம்.ஓம் பூர் : புவ : ஸ்வ :தத் ஸவிதுர் வரேண்யம்பர்கோ தேவஸ்ய தீமஹிதியோ யோந: ப்ரசோதயாத்என்ற இந்த மந்திரத்திற்கு, “நம் புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம்” என்பது சுருக்கமான பொருள். இந்த மந்திரம் விஸ்வாமித்திரரால் கண்டுபிடிக்கப்பட்டது. சூரிய பகவானை நோக்கி வழிபடுவதாக இம் மந்திரம் அமைந்துள்ளது. மிக அதிக சக்தி கொண்டது. அதிர்வுகள் மூலம் ஆக்கப்பூர்வ சக்தியினை ஏற்படுத்தக் கூடியது.