உள்ளூர் செய்திகள்

புத்தாண்டில் தமிழகத்தின் நிலை என்ன?

* மத்திய அரசுடன் சுமூக உறவு இருக்கும். பொருளாதார வளர்ச்சியால் மக்கள் நலன் பாதுகாக்கப்படும்.* முக்கிய தலைவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.* விவசாயம், தொழில் வளர்ச்சிக்கான கடன் தாராளமாக வழங்கப்படும்.* மாணவிகள் கல்வி, விளையாட்டில் திறமையை வெளிப்படுத்துவர். * சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். புதிய நோய்கள் கட்டுப்படுத்தப்படும். * அதிகாரிகள் திறமையுடன் செயல்பட்டு மக்கள் மத்தியில் புகழ் பெறுவர்.* பெண்களின் நிலை மேம்படும். சமூக சேவையில் அவர்கள் முன்னிலை வகிப்பர்.* படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். முதியோர் நலன் குறித்த புதிய திட்டங்கள் அறிமுகமாகும்.* இயற்கை வளத்தைப் பாதுகாக்கும் முயற்சியில் அரசு தீவிரமாக ஈடுபடும்.